7ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் துவக்க விழாவில் வாங்யீ பங்கெடுப்பு
2023-08-16 19:23:54

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங் யீ, ஆகஸ்ட் 16ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் 7ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். இலங்கை, லாவோஸ், நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இத்துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினர்.

வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு, சீன-தெற்காசிய பொருட்காட்சியின் 10வது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகளாக, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிச் சூழ்நிலையைக் கூட்டாகப் பேணிக்காத்து வருகிறோம். தெற்காசிய நாடுகளுடன் இணைந்து, ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தி, புதிய இயக்காற்றலை வளர்த்து, வளர்ச்சிக்கான பொதுச் சமூக எதிர்காலத்தை உருவாக்கி, பிரதேசத்தின் நிரந்தர அமைதி, நிதானம் மற்றும் செழிப்பான வளர்ச்சிக்குப் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை ஆழமாக்குவது, ஒன்றுக்கொன்று தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை ஆழமாக்குவது, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்குவது, மானிட பரிமாற்றத்தை ஆழமாக்குவது ஆகிய 4 ஆலோசனைகளை வாங்யீ வழங்கினார்.