11ஆவது மாஸ்கோ சர்வதேச பாதுகாப்புக் கூட்டத்தில் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உரை
2023-08-16 14:19:06

11ஆவது மாஸ்கோ சர்வதேச பாதுகாப்புக் கூட்டம் ஆகஸ்ட் 15ஆம் நாள் நடைபெற்றது. சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு அதில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பானது, பொதுவான, ஒத்துழைப்பு மற்றும் நிலையான பாதுகாப்புக் கருத்தை பரிந்துரை செய்துள்ளது. பேச்சுவார்த்தை, கூட்டாளியுறவு மற்றும் கூட்டு வெற்றி தரும் புதிய ரகப் பாதுகாப்புப் பாதையில் நடந்து செல்வதைப் பரிந்துரை செய்துள்ளது.

குழப்பம் நிறைந்த உலகத்துக்கு மேலதிக நிலைப்புத் தன்மை மற்றும் நேர்மற்ற சக்தியைக் கொடுக்க, உலக நாடுகளுடன் இணைந்து உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பைக் கூட்டாக நடைமுறைப்படுத்தச் சீனா எதிர்பார்க்கிறது என்று லி ஷாங்ஃபு தெரிவித்தார்.