சீன சேவை நுகர்வு அதிகரிப்பினால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்பு
2023-08-16 11:23:26

சீன அரசு ஆகஸ்ட் 15ஆம் நாள் வெளியிட்ட பொருளாதாரத் தரவுகளின்படி, தேசிய பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைந்து வருவதுடன், குறிப்பாக சேவை நுகர்வு துறையின் அதிகரிப்பு கவனத்தை ஈர்த்தது.

நீண்டகாலமாக, சீனாவின் நுகர்வு வடிவத்தில் வணிகப் பொருட்களின் நுகர்வு என்ற முறை மட்டுமே முக்கியமாக உள்ளது. தற்போது, வணிக பொருட்கள் நுகர்வு மற்றும் சேவை நுகர்வு ஆகிய இரண்டும் முக்கியமாக இருக்கிறது என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நபர்வாரி சராசரி நுகர்வு செலவில், சேவை நுகர்வு 40விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. நுகர்வு கட்டமைப்பில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்தால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு புதிய வணிக வளர்ச்சி வாய்ப்புகள் கொண்டு வரப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு தான், அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் 24 கொள்கைகளை சீன அரசவை அறிமுகப்படுத்தியது. இதில், தொலைதொடர்பு, நாணயம், உயிரி மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டுக்கு அதிக அளவில் திறப்பதற்காக இக்கொள்கைகளில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனச் சேவை துறையில் பங்கெடுக்கும் அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கு மேலும் அதிகமான வளர்ச்சி வாய்ப்பு பெறப்படுவதை இது குறிக்கிறது.

தரமான தயாரிப்புகள் மற்றும் சேவை மீதான நுகர்வோரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் விதமாக, புத்தாக்கம் மீது சீனா அதிக கவனம் செலுத்துவதோடு, மாபெரும் முதலீடு செய்து வருகின்றது. இது, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஈராற்றலை ஏற்படுத்தியுள்ளது.

தவிரவும், சீனா நிதானமான மற்றும் நிலையான கொள்கைகளைச் செயல்படுத்தி வருகின்றது. இது, சீனாவில் முதலீடு செய்யும் அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது.