ஒழுங்கான அந்நிய செலாவணி சந்தை செயல்பாடு
2023-08-16 16:33:33

சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, ஜூலை திங்களில், வங்கிகளின் அந்நிய செலாவணி தீர்வு தொகை 16770 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அதே மாதத்திலே 18250 கோடி அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி விற்பனை செய்யப்பட்டது. ஜனவரி முதல் ஜூலை வரை, ஒட்டுமொத்தமாக வங்கிகளின் அந்நிய செலாவணி தீர்வு தொகை 1இலட்சத்து 30 ஆயிரத்து 010 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. ஒட்டுமொத்தமாக 1இலட்சத்து 31 ஆயிரத்து 320 கோடி அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி விற்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் சீனாவின் அந்நிய செலாவணி சந்தை செயல்பாடு ஒழுங்காக இருந்தது. அமெரிக்க டாலருக்கான சீனாவின் ரென்மின்பி மாற்று விகிதம் உயர்ந்துள்ளது.

விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான காரணிகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு அந்நிய செலாவணி விநியோக மற்றும் தேவை அடிப்படை சமநிலையை நிலைநிறுத்தியது என்று சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகத்தின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான வாங் சுனிங் தெரிவித்தார்.