சீன-இந்திய ராணுவ தளபதிகளின் 19ஆவது சுற்று பேச்சுவார்த்தை
2023-08-16 11:26:55

சீன-இந்திய ராணுவ தளபதி நிலையிலான 19ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 13, 14ஆம் நாட்களில் சுசூல் மோல்டோ பகுதியில் இந்திய பக்கத்தில் நடைபெற்றது.

சீன-இந்திய எல்லையின் மேற்குப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும் ஆழமாகவும் விவாதம் நடத்தியுள்ளன. இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டலில், திறப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. ராணுவம் மற்றும் தூதாண்மை வழிமுறை மூலம் பேச்சுவார்த்தையை நிலைப்படுத்தி எஞ்சிய பிரச்சினைகளைக் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு ஒப்புக்கொண்டனர். இக்காலத்தின் போது, சீன-இந்திய எல்லைப் பகுதியில் அமைதிச் சூழலைப்  பேணிக்காப்பதற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்தன.