7வது சீன-தெற்காசிய பொருட்காட்சி துவக்கம்
2023-08-16 19:13:42

7வது சீன-தெற்காசிய பொருட்காட்சி, “கூட்டு வளர்ச்சிக்கான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் ஆகஸ்டு 16ஆம் நாள் முற்பகல் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் துவங்கியது.

நேபாளம், நடப்புப் பொருட்காட்சியில் சிறப்பு கருப்பொருளிலான அரங்கு கொண்ட நாடாகும். மியான்மார், கௌரவ விருந்தினர் நாடாகும். 15 காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4வது சீன-தெற்காசிய ஒத்துழைப்புக் கருத்தரங்கு, 2வது ஆர்.சி.இ.பி வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்புக் கருத்தரங்கு உள்ளிட்ட 14 நிகழ்ச்சிகள் இப்பொருட்காட்சியின்போது நடத்தப்படவுள்ளன.