இலங்கையில் வறட்சியால் நெல் வயல்கள் பாதிப்பு
2023-08-17 11:08:14

இலங்கையில் காணப்படும் வறட்சியால் 37 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வேளாண் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகஸ்ட் 16ஆம் நாள் தெரிவித்தார்.

அந்நாட்டின் தெற்கு மற்றும் வட மேற்கு மாநிலங்களில் அமைந்துள்ள நெல் வயல்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள தேசங்களை மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கும் என்றும் அமைச்சர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதனிடையில் இலங்கையில் செப்டம்பர் திங்கள் இறுதி வரை வறட்சி நீடிக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.