பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் வாங்யீ சந்திப்பு
2023-08-17 17:33:38

சீன-தெற்காசிய பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுத்த இலங்கை, லாவோஸ், நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங் யீ ஆகஸ்டு 16ஆம் நாள் குன்மிங் நகரில் சந்திப்பு நடத்தினார்.

இலங்கை தலைமையமைச்சருடன் சந்தித்த போது வாங்யீ கூறுகையில், சீனாவுடனான நட்புறவில் ஊன்றி நின்று, சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் சீனாவுக்கு ஆதரவு அளித்து வருகின்ற இலங்கைக்கு சீனா பாராட்டு தெரிவிக்கிறது. இலங்கையுடன் ஆட்சிமுறை பற்றிய அனுபவங்களின் பரிமாற்றம் மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், இலங்கை தொழில்மயமாக்கம் மற்றும் வேளாண் துறையின் நவினமயமாக்க நிலைமையை விரிவுப்படுத்துவதற்கு உதவி செய்யவும் சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், நேபாளத் துணை அரசுத் தலைவருடனான சந்திப்பில் வாங்யீ கூறுகையில், அரசுரிமை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை நேபாளம் பேணிக்காப்பதற்குச் சீனா தொடர்ந்து உறுதியாக ஆதரவு அளிக்கும். நேபாளத்துடன் இணைந்து, செழிப்பான வளர்ச்சியுடைய நட்புப்பூர்வ நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.