அமெரிக்க உயிரி ராணுவச் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு குறித்து ரஷியா அறிவிப்பு
2023-08-17 11:18:03

அமெரிக்காவின் உயிரி ராணுவ செயல்பாடுகள் பற்றிய ஆய்வு குறித்து ரஷிய கதிர் வீச்சு, வேதியியல் மற்றும் உயிரிப் பாதுகாப்புப் படையின் தளபதி கிரில்லோவ் ஆகஸ்ட் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்.

அவர் கூறுகையில், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட “உள்ளார்ந்த ஆற்றல்” கொண்ட உயிரி ஆயுதங்களை அமெரிக்க ராணுவத்தின் தொடர்புடைய திட்டங்கள் ஆய்வு செய்துள்ளன.

அதோடு, உலகின் பல இடங்களிலிருந்து அபாயமான நோய்கிருமிகளைச் சேகரித்தல், பதிவு செய்யாத மருந்துகளின் சோதனை உள்ளிட்ட செயல்பாடுகளில் ஃபோர்ட் டெட்ரிக்கிலுள்ள அமெரிக்க தரைப்படையின் தொற்றுநோய் ஆய்வு மையம் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்று ரஷியாவுக்குக் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது என்றார்.

தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மீது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆர்வம் உண்டு. அதே வேளை, அமெரிக்காவின் உயிரி மருந்து நிறுவனங்களும் அவற்றிலிருந்து பலன் கிடைக்கலாம் என்று கிரில்லோவ் தெரிவித்தார்.