© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சிங்காய்-திபெத் பீடபூமி சூழலியல் பாதுகாப்பு சட்டத்தின் நடைமுறையாக்கம் பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவருமான லீ ஹோங்சொங் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், தேசிய சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் நிகழ்த்திய முக்கிய உரை, முதலாவது தேசிய சூழலியல் தினம் பற்றிய அவரது உத்தரவு ஆகியவற்றின்படி செயல்பட்டு, சிங்காய்-திபெத் பீடபூமி சூழலியல் பாதுகாப்பு சட்டத்தின் பன்முக மற்றும் பயனுள்ள நடைமுறையாக்கத்தை முன்னேற்றி, இப்பகுதியின் சுற்றுச்சூழலை உயர்தரமுடன் பாதுகாப்பதற்காக சட்ட ஆற்றலை திரட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு சட்டமான சிங்காய்-திபெத் பீடபூமி சூழலியல் பாதுகாப்பு சட்டம், இவ்வாண்டு செப்டம்பர் முதல் நாள் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.