© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்க நேரப்படி, ஆகஸ்ட் 17ஆம் நாள் வரை, ஹவாய் மாநிலத்தின் மாவ்யி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ முழுமையாக கட்டுக்குள் வைக்கப்படவில்லை. இத்தீயில் நூற்றுக்கு மேலானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயினர். “எங்கள் ஊர் சொர்க்கத்திலிருந்து நரகமாக மாறியுள்ளது”, “தீ விபத்து எச்சரிக்கை அல்லது பேரிடர் தவிர்ப்பு வழிகாட்டல் எதுவுமில்லை”, “மீட்புதவி தாமதமில்லாமல் இருந்திருந்தால் பலர் உயிர்கள் பிழைத்திருக்கலாம்” என அமெரிக்கர் பலர் கோபத்துடன் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான காட்டுத் தீ விபத்து இதுவாகும். இது பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவதுடன், இயற்கை நிலைகள் மட்டுமல்ல, மனிதரின் செயலும் இதற்குக் காரணமாகும் என்று தெரிய வந்துள்ளது.
உலகளவில் வல்லரசான அமெரிக்கா, பணத்தையும் தொழில் நுட்பங்களையும் அதிகமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதன் மீட்புதவித் திறன் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஹவாய் மாநிலத்தில் பொது பாதுகாப்புக்கான வலிமைமிக்க முன்னெச்சரிக்கை முறைமை உள்ளது. அங்குள்ள 400 எச்சரிக்கை கருவிகளில் 80 கருவிகள் மாவ்யி தீவில் உள்ளன. ஆனால் காட்டுத் தீ ஏற்பட்ட போது அவை ஒலிக்கவில்லை. மேலும், மாவ்யி தீவுக்கு 100 மைல் தொலைவில் உள்ளூர் இராணுவப் படை உள்ளது. ஆனால் தீ விபத்து ஏற்பட்ட 72 மணிகளுக்குப் பிறகு அமெரிக்க கடற்படை, மருத்துவக் கப்பல், ஹெலிக்கப்டர், தரைப்படை, மீட்புதவி சாதனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைந்தன. விபத்துக்குப் பிந்தைய பயனுள்ள மீட்புதவி, அமெரிக்க அரசுக்கு மாறாக, உள்ளூர் மக்களால் மேற்கொள்ளப்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டது.
செயலிழக்க எச்சரிக்கை கருவிகள், தாமதமான மீட்புதவி அணி, முயற்சிகள் மேற்கொள்ளாத அமெரிக்க இராணுவம் முதலியவை எல்லாம், பொது மக்கள் சந்திக்கும் துன்பங்கள் மீது அந்நாட்டு அரசியல்வாதிகள் அலட்சியம் செய்து வருவதைக் காட்டுகின்றன.