வெள்ளத்தடுப்பு, நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்புப் பணி பற்றிய கூட்டம்
2023-08-18 15:14:58

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தரக் குழு வெள்ளத்தடுப்பு, நிவாரணப்பணி, மறுசீரமைப்புப் பணி ஆகியவை தொடர்பாக ஆகஸ்டு 17ஆம் நாள் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

தற்போது சீனா இன்னும் வெள்ளக் காலத்தில் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை, வெள்ளம், சூறாவளி முதலிய பேரழிவுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. சில ஆறுப் பரப்பில் இன்னும் வெள்ள அபாயங்கள் உள்ளன.

தொடர்புடைய அரசுத் துறைகள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும். மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பினை எப்போதும் முதலிடத்தில் வைக்க வேண்டும். வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பேரழிவு நிவாரண நிதியைப் பயன்படுத்தி மறுசீரமைப்பை விரைவுபடுத்த வேண்டும். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் முதலிய சேதமடைந்த அடிப்படை வசதிகளை வெகுவாக மீட்டெடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் மற்றும் விவசாய வசதிகளை மீட்டெடுக்க வேண்டும்.