அமெரிக்காவில் வீடற்றவர்களின் மக்கள் தொகை 11 விழுக்காடு அதிகரிப்பு
2023-08-18 20:05:48

Muslimnetwork TV எனும் இணையதளத்தில் கிடைத்த தகவலின்படி, இவ்வாண்டு அமெரிக்காவில் வீடற்றோரின் எண்ணிக்கை, தற்போது வரை 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்பு, அதிக வீட்டு செலவுகள் மற்றும் தொற்றுநோய் கால உதவி திட்டங்களின் முடிவின் காரணமாக ஏற்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் சராசரி வீட்டு வாடகை, மாதத்திற்கு 2000 டாலர்களை முதல் முறையாக தாண்டியுள்ளது. அமெரிக்காவில் சராசரி வீட்டு வாடகையில் 100 டாலர் அதிகரிப்பு ஏற்பட்டால், வீடற்றவர்களின் எண்ணிக்கை 9 விழுக்காடு அதிகரிக்கும்.

அமெரிக்காவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 138,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.