லாய் சிங்தே பயண இடைத்தங்கலுக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
2023-08-18 17:34:57

ஆகஸ்ட் 12 முதல் 18ஆம் நாள் வரை அமெரிக்காவில் லாய் சிங்தே பயண இடைத்தங்கல் செய்து, நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவைச் சென்றடைந்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவில் லாய் சிங்தேவின் பயண இடைத்தங்கலுக்கு அமெரிக்கா வலுக்கட்டாயமாக 2 முறை ஏற்பாடு செய்தது. இது, ஒரே சீனா கோட்பாட்டைக் கடுமையாக மீறியதோடு, சீனாவின் இறையாண்மை மற்றும் சீன உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் தீங்குவிளைவித்துள்ளது. தைவான் சுதந்திரச் சக்திக்கு விடப்பட்ட மிக தவறான சமிக்கையும் இதுவாகும். இதற்கு சீனா உறுதியான எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.

சொல்லும் செயலும் முரண்பாடாகச் செயல்படும் அமெரிக்கா, தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனாவைத் தடை செய்யும் நெடுநோக்கைப் பின்பற்றி, ஒரே சீனா கோட்பாட்டைத் தொடர்ந்து சீர்குலைக்கும் தனது உண்மை நோக்கத்தை அதன் செயல் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் வாங் வென்பின் குறிப்பிட்டார்.