பிரிக்ஸ் உச்சிமாநாடு பற்றிய சீனாவின் கருத்து
2023-08-18 17:23:21

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்டு 18ஆம் நாள் கூறுகையில், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் பங்கெடுக்கும் பல்வேறு தரப்பினர், தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் முனைப்பான சவால்கள் குறித்து, ஆழ்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சிக்கலாக மாறி வரும் உலகச் சூழ்நிலைக்கு நிலைத் தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை ஊட்டுகின்றனர் என்றார்.

மேலும், பிரிக்ஸ் அமைப்புமுறை உருவாக்கப்பட்ட பிறகு, ஒற்றுமை மற்றும் சுய வலிமைக்கான ஆரம்ப குறிக்கோளைக் கடைப்பிடித்து, திறப்பு, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றி ஆகிய எழுச்சிகளுடன், பல்வேறு துறைகளில் பயன்தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, உலக மேலாண்மை மற்றும் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.