மாவ்யி தீவின் தீ விபத்தில் 114 பேர் பலி
2023-08-19 17:32:50

அமெரிக்க ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த மாவ்யி தீவில் ஆக்ஸ்ட் 8ஆம் நாள் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில், தற்போதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 58 விழுக்காட்டுப் பகுதியில் தேடுதல் பணி முடிவடைந்தது. தற்போது, தீவிலுள்ள சில பகுதிகளில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என்று ஹவாய் மாநிலத்தின் ஆளுநர் க்ரீன் தெரிவித்தார்.

அமெரிக்கக் கூட்டாட்சியின் அவசரப் புலனாய்வு குழு, தீ விபத்துக்கான காரணம் அறியும் விதம், மாவ்யி தீவுக்கு அனுப்பப்படவுள்ளது. தவிரவும், 1400க்கும் அதிகமானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.