கோடைக்கால தானிய கொள்முதல் பணி
2023-08-19 19:45:45

சீன தேசிய தானிய மற்றும் பொருட்கள் சேமிப்பு பணியகம் வெளியிட்ட புதிய தகவலின் படி, இப்போது வரை, பல்வேறு உற்பத்தி பகுதிகளிலுள்ள தானிய நிறுவனங்கள், இக்கோடைக்காலத்தில் 5 கோடியே 54 இலட்சத்து 70 ஆயிரம் டன் தானியங்களை கொள்முதல் செய்துள்ளன. இதனால் இவ்வாண்டின் 80 விழுக்காட்டு கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோதுமை, கோடைக்காலத்தில் கையிருப்பில் இருக்க வேண்டிய முக்கிய தானியமாகும். தற்போது ஜியாங் சூ, அன் ஹுய், ஹூ பெய் ஆகிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் பணி கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. ஹெய் நான், ஹெய் பேய், ஷன் துங் ஆகிய மாநிலங்களில் இப்பணி கிட்டத்தட்ட 80 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.