பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தலைவரின் பேட்டி
2023-08-19 16:32:58

அமெரிக்காவின் சில வங்கிகள் அண்மையில் மூடப்பட்டன. 100க்கும் அதிகமான வங்கிகள், திவாலாகும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. இச்சூழல், சர்வதேச பொருளாதாரத்துக்கும், புதிதாக வளரும் நாடுகளுக்கும் தீங்கு விளைவிப்பது குறித்து, பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தலைவர் தில்மா ரோசெவ் அம்மையார், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், அமெரிக்க டாலர், புதிதாக வளர்ச்சி வாய்ப்பைக் கண்டுள்ள சமூகங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டாலர் மாற்றுவிகித உயர்வு மற்றும் சொந்த நாணய மதிப்பிறக்கம் ஏற்பட்டால், பல நாடுகள் பண வீக்க ஆபத்தை எதிர்கொள்ளும். தவிரவும், புவிசார் அரசியல் பதற்றப் பின்னணியில், பல்வகை தடை நடவடிக்கைகள், உலகமயமாக்கத்தைப் பிளவுபடுத்தக் கூடும். எடுத்துக்காட்டாக, தற்சார்பாக, சுங்க வரியை உயர்த்துவது, சில்லு மற்றும் அறிவியல் மசோதா அமலாக்கம் முதலிய தடை நடவடிக்கைகள் மூலம் சீன வளர்ச்சியை மட்டுப்படுத்தும் செயல்கள், தவறானவை. இதன் விளைவாக, உலகின் தொழில் சங்கிலி துண்டிக்கப்பட்டு விடும். அவை, யாருடைய நலன்களுக்கும் ஏற்றது இல்லை என்று தெரிவித்தார்.