வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப்பணி பற்றிய கூட்டம்
2023-08-20 16:41:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் கூட்டம், ஆகஸ்ட் 17ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வெள்ளத்தடுப்பு  நிவாரணிப்பணி மற்றும் மீட்சிப் பணி பற்றி ஆய்வு செய்யப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

ஜுலை திங்கள் பிற்பாதி மற்றும் ஆகஸ்ட் திங்கள் முற்பாதி, வெள்ளத்தடுப்பு பணியின் முக்கியக் காலமாகும். ஷி ச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், பல்வேறு நிலை கட்சி கமிட்டிகளும் அரசுகளும் வெள்ளத்தடுப்பை எதிர்கொள்ளும் விதம் சீராக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையகம் மற்றும் பல்வேறு நிலை தொடர்புடைய நிறுவனங்கள், சரியான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். தவிரவும் தொழில் நிறுவனங்களும் தனிநபர்களும் வெள்ளதடுப்பில் பங்காற்ற வேண்டும். அனைவரும் கூட்டாக வெள்ளத்தடுப்பு பணியை நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.