பலதரப்புவாத ஈர்பாற்றலை பிரிக்ஸ் முறைமை காட்டும்: தென்னாப்பிரிக்க பிரமுகர்கள்
2023-08-20 17:37:27

பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் 15வது உச்சிமாநாடு விரைவில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு முறைமையின் செல்வாக்கு அதிகரித்து வருவதுடன், இம்முறைமையில் சேர, பல நாடுகள் விண்ணப்பித்துள்ளன. ஆப்பிரிக்க பிரமுகர்கள் பலர் இவ்வுச்சிமாநாட்டின் மீதான எதிர்பார்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு முறைமையின் சீரான இயக்கம், மாபெரும் ஈர்ப்பாற்றலைக் காட்டியுள்ளது. மென்மேலும் அதிகமான நாடுகள், இதில் சேர விரும்புகின்றன. நடைபெறவுள்ள இவ்வுச்சிமாநாடு, ஆப்பிரிக்க பொருளாதார ஒருமைப்பாட்டை மேலும் முன்னெடுத்து, ஆப்பிரிக்க பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது உறுதி என்று அவர்கள் தெரிவித்தனர்.