தென்னாப்பிரிக்க நாடாளுமன்றக் கீழவையின் துணை தலைவர்-சீன ஊடகக் குழுமத் தலைவர் சந்திப்பு
2023-08-20 16:39:52

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றக் கீழவையின் துணைத் தலைவர் செனொலி, 19ஆம் நாள் கேப்டவுன் நகரில், சீன ஊடகக் குழுமத் தலைவர் ஷென்ஹாய்ஷியுங் உள்ளிட்டோரைச் சந்தித்தார். அப்போது சீன ஊடகக் குழுமம் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மிக பெரிய ஒளிபரப்பு மேடையான எம் ஐ எச் குழுமம் எட்டியுள்ள ஒத்துழைப்புக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஷென்ஹாய்ஷியுங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-தென்னாப்பிரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 25வது ஆண்டுநிறைவாகும். தென்னாப்பிரிக்க நாடாளுமன்றக் கீழவையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு நட்புறவை வளர்த்து, உயர்நிலை சீன-தென்னாப்பிரிக்க பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதை முன்னெடுக்க, சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்று தெரிவித்தார்.

செனொலி கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வருகையை, தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கிறது. நட்பார்ந்த இரு நாடுகள், மேலதிக துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வதுடன், சர்வதேச ஒழுங்கு, மேலும் நேர்மையான திசை நோக்கி வளர்வதை முன்னேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.