முதல் காலடியை எடுத்து வைக்காமல் குறுகிய பயணத்தைக் கூட முடிக்க முடியாது
2023-08-21 09:08:08

முதல் காலடியை எடுத்து வைக்காமல் குறுகிய பயணத்தைக் கூட முடிக்க முடியாது. செயல்படாமல் ஒரு சிறிய பணியைக் கூட செய்து முடிக்கமுடியாது.

இது நிரந்தரமான உண்மை. செயல்படாமல் வெறுமனே பேசுவது, செயல்படாமல் பெரிய இலக்குகளுடன் இருப்பது என்பது  மிகவும் பயம் தரும் ஒன்றாகும்.  படிப்பதிலோ அல்லது பணி புரிவதிலோ யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்டு, நடைமுறையில் ஆழமாகச் சென்று உண்மையான அறிவைப் பெற வேண்டுகிறோம். எனது நீண்டகால பணியின் மூலம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான அறிவு,  கடின உழைப்பின் மூலம் மட்டுமே சோசலிசத்தை அடைய முடியும் என்பது தான்.