7வது சீன-தெற்காசிய பொருட்காட்சியில் 483 திட்டங்கள் கையொப்பமிடப்பட்டன
2023-08-21 10:30:48

5 நாட்கள் நீடித்த 7வது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஆகஸ்டு 20ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நிறைவுப் பெற்றது. நடப்புப் பொருட்காட்சியில் மொத்தம் 483 திட்டங்கள் கையொப்பமிடப்பட்டன. அவற்றில் 41 ஆயிரத்து 265.4 கோடி யுவான் மதிப்புள்ள 342 முதலீட்டுத் திட்டங்களும், 1051.1 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 141 வணிக மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் இடம்பெற்றன.

மேலும், 85 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களும், 30 ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்தனர்.