இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கான திறவுகோலாகும்.
2023-08-21 02:30:33

இயற்கையை நேசிக்கும் தத்துவத்துக்கிணங்கச் செயல்பட வேண்டும். இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கான திறவுகோலாகும். எளிமையான, பசுமையான மற்றும் குறைந்த கார்பனுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதை ஊக்குவிப்பதோடு, ஆடம்பரம் மற்றும் பொருட்களை வீணாக்கும் செயல்களைத் தவிர்த்து, பசுமை மற்றும் ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்க்கைப் பண்பாட்டை உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரும் பங்கெடுக்கும் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும்.

மேலும், சமூக வாழ்க்கையில் சூழலியல் பாதுகாப்புச் சிந்தனையை, முக்கிய பண்பாடாக மாற்ற வேண்டும்.