ஆசிய-பசிபிக்கில் “நேட்டோ” போன்ற அமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சி
2023-08-21 15:08:22

பெய்ஜிங் நேரப்படி ஆகஸ்ட் 19ஆம் நாள், அமெரிக்க, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் முதலாவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் கேம்ப் டேவிட் இடத்தில் நிறைவடைந்தது. இந்த உச்சிமாநாட்டில் மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் தைவான் நீரிணை, தென் சீனக் கடல் முதலியவை குறித்து விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கருத்து இந்த உச்சிமாநாட்டில் பரப்பப்பட்டது. சீனாவை இலக்கு வைக்கவில்லை என்று அமெரிக்கா வாயலில் கூறுகிறது. ஆனால், இதற்கு மாறாக அமெரிக்கா செயல்படுகிறது.

குறுகிய காலத்தில் ஆசிய-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை அமெரிக்காவால் உருவாக்க முடியாது. எனவே, தூதாண்மை நடவடிக்கைகளின் மூலம், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து, சிறிய அளவிலான “நேட்டோவை” உருவாக்குவது என்பது அமெரிக்காவின் உள்நோக்கமாகும். இந்த உச்சிமாநாட்டின் மூலம், அமெரிக்காவின் இந்த நோக்கம் நனவாக்கப்படுமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ஜப்பான் மற்றும் தென் கொரியா, அமெரிக்காவின் கூட்டாணிகளாகும். இருப்பினும், ஒவ்வொரு தரப்புக்கும் சொந்தமான நோக்கம் உண்டு. மூன்று நாடுகளிடையே தீர்க்க முடியாத முரண்பாடு உள்ளது.