உலகளாவிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அதிகரிக்க ஒன்றுபடும் பிரிக்ஸ் நாடுகள்
2023-08-21 18:49:00

படம்:CFP

உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளான பிரிக்ஸ் நாடுகள், விண்வெளி திட்டங்கள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரையான பல்வகை ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. பல ஆண்டுகளாக சீனாவிற்கும்  வளரும் நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இன்று நிலவும் ஒருதலைப்பட்ச மற்றும் பாதுகாப்புவாத உலகில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

பிரேசில், இந்தியா, சீனா, ரஷியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகள் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளது, எல்லை தாண்டிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான தேவையை பிரதிபலிக்கின்றது. இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஜிகாங் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்களிடம் கூறுகையில்

சீனா தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவமளிக்கிறது என்றார் அவர்.

ஆகஸ்ட் 22ஆம் நாள் துவங்கவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு, கோவிட்-19 தொற்றுநோய்க்கு பின் நேரில் நடத்தப்படும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடாகும். ஐந்து நாடுகளின் தலைவர்கள் சர்வதேச சவால்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அவர்கள் மாற்றங்கள் மற்றும் குழப்பம் நிறைந்த உலகிற்கு நிதானம் மற்றும் நேர்மறை ஆற்றலை செலுத்த முற்படுகிறார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார அளவு கொண்ட நாடாகும். மட்டுமல்லாமல், வயர்லெஸ் கம்யூனிகேஷன் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரையிலான புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகவும் மாறி வருகிறது. சீனா தனது அறிவாற்றலைத் தேவைப்படும் நாடுகளுடன் முனைப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட பகிர்வு ஒப்பந்தத்தின்படியே, சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் பிரிக்ஸ் (என்எஸ்ஏ) நாடுகளுடன் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் திட்டத்தில் இணைந்து செயல்படுகிறது. ஒப்பந்தத்தில் பங்கேற்ற நாடுகள் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் தரவைப் பயன்படுத்தி இயற்கை பேரழிவுகளை சிறப்பாக கண்காணிக்க அது உதவுகிறது. நவம்பர் மாதம் 5 நாடுகள் கூட்டத்தில் என்எஸ்ஏ தனது பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வாரியங்களிடம், சீனா, தனது விண்வெளி ஆய்வகத்தை நிர்மாணிப்பது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது, செயற்கைக்கோள் துறையிலான ஒத்துழைப்பு சீன-பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான ஒரு மாதிரியாக இருக்கம்.

161 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்திட்டுள்ளது. சீனா 200க்கும் மேற்பட்ட சர்வதேச அல்லது பலதரப்பு வழிமுறைகளில் உறுப்பினராக உள்ளது. தெர்மோநியூக்ளியர் பரிசோதனை உலை மற்றும் உலகின் மிக மேம்பட்ட தொலை நோக்கிகளில் ஒன்றான சர்வதேச முயற்சியில் சீனா இணைந்துள்ளது. சீனா பிரிக்ஸ் நாடுகளுடனும், காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சிகளிலும் அதற்கு அப்பாலும் பணியாற்றி வருகிறது.

சீனா தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது, மேலும் இருதரப்பு வர்த்தகத் தொகை, ஆண்டுக்கு ஐந்து சதவீதம் அதிகரித்து. 2022ஆம் ஆண்டில் இத்தொகை 56.74 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸின் தேசிய கண்டுபிடிப்பு போட்டித்திறன் மேம்பாடு குறித்த சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, பிரிக்ஸ் நாடுகள் உலகளாவிய ஆர் அன்ட் டி செலவினங்களில் ஆறாவது மற்றும் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகளில் கால் பகுதியை வழங்கின. 6 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மேம்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்த ஐந்து நாடுகளும் பொறுப்பாகும், இது உலகின் மொத்த அளவில் 25விழுக்காடு வகிக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள் பயோ-டெக், காலநிலை மாற்றம், புதிய எரிசக்தி மேம்பாடு, விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பரந்த ஒத்துழைப்பு திறனைப் பகிர்ந்து கொள்வதாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு கருத்தரங்கில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகளைத் தவிர, சீன தொழில் நிறுவனங்களும் பிரிக்ஸ் நாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ரஷியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, சீனா ஒரு முக்கிய வர்த்தகக் கூட்டாளி. சியோமி மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட சீன திறன்பேசி பிராண்டுகள் இந்தியா மற்றும் பிரேசில் சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

மொபைல் கட்டணம்,  திறன்பேசிகள் மற்றும் ஆன்லைன்-ஷாப்பிங் போன்ற சீனாவில் ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் தற்போது ஆப்பிரிக்காவிலும் விரைவாக விரிவடைகின்றன. மின்னணு வணிக வலையமைப்பு, உணவு விநியோகம் மற்றும் பிற சேவைகளை உருவாக்க வலுவான தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு நன்கு அறியப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீன நிறுவனங்கள் உதவுகின்றன.