ஒரு நாட்டை ஆள்வதெற்கென்று சில குறிப்பிட்ட கொள்கைகள் உள்ளன
2023-08-21 09:07:59

ஒரு நாட்டை ஆள்வதெற்கென்று, சில குறிப்பிட்ட கொள்கைகள் உள்ளன. அவற்றில் மக்களுக்கு நலன்களைக் கொண்டு வருவது என்பது ஆணிவேராக இருக்க வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனை என்பது புரிந்து கொள்வதற்குரிய எளிதான கருத்தாகும்.

வார்த்தைகள் வழியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனைகளிலோ எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இனிமையான வாழ்க்கை மீதான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் அடிப்படை நலன்களை தொடர்ந்து நனவாக்கி பேணிக்காத்து நன்றாக வளர்க்க வேண்டும்.

வளர்ச்சியை நாடுவது என்பது மக்களுக்கானது. தவிரவும், மக்களைச் சார்ந்து, மக்களுடன் அதன் நலன்களை பகிர்ந்து கொள்ளப்படுவதை நாம் உறுதியாகச் செயல்படுத்த வேண்டும்.