தேசிய நலனைப் பலிகொடுத்த லாய் சிங்தே
2023-08-21 19:36:59

அண்மையில் சீனாவின் தைவான் பகுதியின் துணைத் தலைவர் லாய் சிங்தே ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்குஅளித்த பேட்டியில், தைவான் சுதந்திரம் பற்றிய அபத்தமான பேச்சைப் பரப்பினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,

லாய் சிங்தே தைவான் சுதந்திரம் பற்றிய அபத்தமான பேச்சைப் பரப்பினார். தேசிய நலனைப் பலிகொடுத்து, அமெரிக்காவைச் சார்ந்து, தைவான் சுதந்திரத்தை முயற்சி செய்யும் நோக்கத்தை இது வெளிகாட்டியது. பிடிவாதமுடைய தைவான் சுதந்திரவாதியாகவும் தொந்தரவை உண்டாக்குபவராகவும் அவர் திகழ்கின்றார் என்பதை இது வெளிகாட்டியது என்றார்.