சந்திரயான்-3 சந்திரனில் தரையிறங்கும் நேரம் அறிவிப்பு
2023-08-21 10:33:59

இந்தியாவின் சந்திரயான்-3 என்னும் விண்கலத்தின் தரையிறங்கும் கருவி ஆகஸ்டு 23ஆம் நாள் மாலை 6:04 மணி அளவில் சந்திரனில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 20ஆம் நாள் அறிவித்தது.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல், முகநூல், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் மற்றும் இந்நிறுவனத்தின் இணையத்தளம் ஆகியவற்றின் மூலம் நேரலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.