அமெரிக்கா ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகளின் மீது சீனா எதிர்ப்பு
2023-08-21 17:30:14

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டேவிட் முகாமில் சந்திப்பு மேற்கொண்டனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,

முகாமில் சந்தித்த அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள், தைவான் மற்றும் தென் சீன கடல் குறித்து சீனாவின் மீது அவதூறு பரப்பினர். இது சீனாவின் உள் விவகாரங்களில் கடுமையாக தலையீடு செய்து, சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்குத் தீங்கு விளைவித்துள்ளது. சர்வதேச உறவு அடிப்படைக் கோட்பாட்டை மீறிய இந்நடவடிக்கைக்கு சீனா கடுமையான மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றது என்றார்.