சந்திரனின் தரைபரப்பில் விழுந்து நொறுங்கிய ரஷியாவின் லூனா-25 எனும் விண்கலம்
2023-08-21 11:47:46

ரஷியத் தேசிய விண்வெளி குழுமம் 20ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ரஷியாவின் லூனா-25 எனும் விண்கலம் திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகிச் சென்றால், சந்திரனின் தரைபரப்பில் விழுந்து நொறுங்கியது. அதோடு, தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பூர்வாங்க ஆய்வு முடிவுகளின் படி, உண்மையான மற்றும் முன்னரே கணிக்கப்பட்ட அளவுருக்களுக்கு இடையே ஏற்பட்ட பிழை காரணமாக, இவ்விண்கலம் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகியது தெரிவந்தது.