அணு கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்துக்கு சீனா கவனம்
2023-08-21 19:36:25

அணு கழிவு நீரை வெளியேற்றும் திட்டத்தை, ஒத்திப்போட மாட்டோம் என்று ஜப்பான் தலைமை அமைச்சர் ஃபுமியொ கிஷிடா அண்மையில் தெரிவித்தார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பி 21ம் நாள் கூறுகையில், இது குறித்து கவனம் செலுத்தி வரும் சீனா, எதிர்வரும் நிலைமையை உற்றுநோக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்தைக் கட்டாயமாகச் செயலாக்குவது, நம்பிக்கை இழந்த செயலாகும். ஜப்பான் க்யோடோ செய்தி நிறுவனம் 20ம் நாள் வெளியிட்ட மக்கள் கருத்து கணிப்பு முடிவின்படி, இத்திட்டம், ஜப்பானின் செல்வாக்கு மற்றும் உள்ளார்ந்த நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று 88.1 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். ஜப்பான் அரசின் தொடர்புடைய விளக்கம், போதுமானதாக இல்லை என்று 81.9 விழுக்காட்டினர் கருதினர் என வாங் வென்பின் குறிப்பிட்டார்.

ஜப்பான் அரசு 22ம் நாள் அமைச்சரவை கூட்டம் நடத்தி, இத்திட்டத்தைத் துவக்கும் தேதி பற்றி முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.