பிரிக்ஸ் அமைப்பில் இணைவதில் இருந்து கிடைக்கும் வாய்ப்புகள்
2023-08-22 14:12:32

சீனா, தென்னாப்பிரிக்காவுக்கு மிகப் பெரிய ஒற்றை நிலை வர்த்தக கூட்டாளியாகத் திகழ்கிறது என்று தென்னாப்பிரிக்காவுக்கான பிரிக்ஸ் வணிக கவுன்சில் தலைவர் புசி மபுஸா சி.ஜி.டி.என் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார். சீனா ஆப்பிரிக்க கண்டத்தில் முதலீடு செய்து இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி உள்ளூரில் மேலதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விருப்பம் தெரிவித்த மபுஸா, இத்தகைய ஒத்துழைப்பு உறவு இரு தரப்பு முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரித்து, எதிர்காலத்தில் தொடர்ந்து மேம்படும் என்றும் கருதுகிறார். பிரிக்ஸ் அமைப்பில் இணைவதில் இருந்து கிடைக்க கூடிய வாய்ப்புகளை நேரில் கண்டு, மேலதிக நாடுகள் இதில் இணைந்து கொள்ள விரும்புகின்றன. இது எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு தேவைப்படும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் மபுஸா வலியுறுத்தினார்.