பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2023-08-22 15:56:47

பாலஸ்தீன-இஸ்ரேல் சூழ்நிலை மேலும் மோசமாவதைத் தவிர்த்து, பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் தீர்ப்பதை சர்வதேச சமூகம் உறுதியான அரசியல் விருப்பம், பயன்தரும் தூதாண்மை நடவடிக்கை மற்றும் திட்டவட்டமான முயற்சி மூலம் முன்னேற்ற வேண்டும் என்று மத்திய கிழக்கு பிரதேசத்தின் பாலஸ்தீனப் பிரச்சினைக்கான வெளிப்படையான கூட்டத்தில் ஐ.நா பாதுகாப்பவை வேண்டுகோள் விடுத்தது.

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன் கூறுகையில், அண்மையில் நடைபெற்ற எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய முத்தரப்பு தலைவர்களின் கூட்டத்துக்குச் சீனா வரவேற்பு தெரிவிப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதை முன்னேற்ற, மேலும் செல்வாக்கு வாய்ந்த பெருமளவிலான சர்வதேச அமைதிக் கூட்டம் நடத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.