© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜப்பான் அரசு ஆகஸ்டு 24ஆம் நாள் முதல் ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரைக் கடலில் வெளியேற்றுவதற்கு அந்நாட்டு மக்கள் 22ஆம் நாள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான வாக்குறுதியையும் சர்வதேசச் சமூகத்தின் கவலைகளையும் ஜப்பான் அரசு புறக்கணித்துள்ளதுடன் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
மீனவர்களின் குரல்களையும் அணு விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும் கேட்க வேண்டும். கடலை மாசுபடுத்தக் கூடாது.
பல விஷயங்கள் விவாதிக்கப்படவில்லை. ஆனால், அவை செயல்படுத்தத் தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் இச்செயல் நியாயமற்றது. அணு உலைக் கழிவு நீர் பாதுகாப்பானது என்றால், அதை நீங்களே பயன்படுத்தலாம் என்று ஜப்பானின் மக்கள் தெரிவித்தனர்.