பெய்ஜிங்கில் நடைபெறும் 2023 சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகக் கண்காட்சி
2023-08-22 15:02:19

2023 சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகக் கண்காட்சி செப்டம்பர் 2ஆம் நாள் முதல் 6ஆம் நாள் வரை பெய்ஜிங் மாநகரில் நடைபெறவுள்ளது.

சீன அரசவையின் செய்தி அலுவலகம் ஆகஸ்ட் 21ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றில், இக்கண்காட்சி தொடர்பான தகவல்களை தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் இதில் தெரிவித்தார்.

51 நாடுகள் மற்றும் 24 சர்வதேச அமைப்புகள், நேரடியாக இக்கண்காட்சியில் பங்கெடுக்கும். ஆகஸ்ட் 20ஆம் நாள் வரை, 2200க்கு அதிகமான தொழில் நிறுவனங்கள் நேரடியாக இதில் கலந்துகொள்ள விண்ணப்பிச் செய்துள்ளன. இவ்வற்றில் ஃபார்ச்சூன் டாப் 500லும் தொழில் துறைகளிலுள்ள முன்னணி நிறுவனங்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.

சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு, சீனாவின் சேவை வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 6 இலட்சம் கோடி யுவானாக, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 12.9 விழுக்காடு அதிகரித்து, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது. இது 9 ஆண்டுகளாக தொடர்ந்து உலகில் 2ஆவது இடத்தில் உள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் சேவை வர்த்தகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 3 இலட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானாக, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.