40-க்கும் அதிகமான நாடுகள்: பிரிக்ஸ் அமைப்பில் இணைய விரும்புகிறது
2023-08-22 08:03:33

படம்:CFP

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே 15ஆவது உச்சி மாநாடு விரைவில் தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. இதில் பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். ஏனென்றால், தற்போது வரை 40-க்கும் அதிகமான நாடுகள் பிரிக்ஸில் இணைய விரும்புதவாகவும், 20-க்கும் அதிகமான நாடுகள் அதிகாரப்பூர்வ முறையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாகவும் தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

2001 முதல் 2022ஆம் ஆண்டு வரை, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 8.4 விழுக்காட்டில் இருந்து 25.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஆலோசனை  நிறுவனம் இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கொள்வனவு ஆற்றல் சமநிலையைக் கணிக்கும் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்தில் ஜி-7 நாடுகளை விட பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு  அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் 15ஆம் நாள், பிரிக்ஸ் அமைப்பின் கீழ் புதிய வளர்ச்சி வங்கி, தென் ஆப்பிரிக்காவில் 150 கோடி ராண்ட் மதிப்புள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டின் நாணயத்தைப் பயன்படுத்தி கடன் பத்திரங்களை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்தியாவில் ரூபாய் ரீதியான கடன் பத்திரங்களை வெளயிடுவதற்கான சாத்தியம் இவ்வாண்டுக்குள் விவாதிக்கப்படும். இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வளர்ச்சி வங்கி உதவி வழங்கி வருகிறது.

பிரிக்ஸ், ஒரு மூடப்படும் அமைப்பு அல்ல. வேறு நாடுகளை விலக்கும் சிறிய குழு அல்ல. உண்மையில், 2017ஆம் ஆண்டு பிரிச்ஸ் உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் பிளஸ் என்ற ஒத்துழைப்பு முறை முன்வைக்கப்பட்டுள்ளது 2022ஆம் ஆண்டு  உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் விரிவாக்கத்தைத் தொடங்கி வைப்பது என முன்மொழியப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய  ஒத்துழைப்பு  அமைப்பு முறையில் மேலதிக கூட்டாளிகள் இணையும் என்றும் மேலும் அதிகமளவிலான  வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.