புதிய கம்போடிய அரசுக்குச் சீனா வாழ்த்து
2023-08-22 19:12:40

கம்போடியாவின் புதிய தலைமையமைச்சராக ஹன் மானைத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் 22ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்தது. அத்துடன் புதிய அமைச்சரவைப் பட்டியனுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுடன், கம்போடிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராக குயின்சோ டாலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கம்போடியாவில் புதிய அரசு அமைந்துள்ளதற்குச் சீனா வாழ்த்து தெரிவித்தது. அந்நாட்டுத் தலைமையமைச்சர் ஹாங் மானே தலைமையில், தேசிய கட்டுமான இலட்சியத்தில் புதிய சாதனைகளை கம்போடிய பெற வேண்டுமென விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.