மத்திய அமெரிக்கக் கண்ட நாடாளுமன்றத்துடன் நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவு:சீனா
2023-08-22 19:11:55

மத்திய அமெரிக்க கண்டத்தின் நாடாளுமன்றம், தைவான் பிரதேசத்தின் "சட்டமியற்றல் குழு" மற்றும் "நிரந்தர பார்வையாளர்" தகுநிலையை ரத்து செய்யும் தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன் பதிலாக, சீனத் தேசிய மக்கள் பேரவையை நிரந்தர பார்வையாளராக ஏற்றுகொள்ள இந்நாடாளுமன்றம் தீர்மானித்தது. இத்தீர்மானத்தைச் சீனா வெகுவாகப் பாராட்டியது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மத்திய அமெரிக்கக் கண்ட நாடாளுமன்றத்துடன் நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவை வளர்க்கச் சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.