இலங்கையில் குறைந்து வரும் பணவீக்க விகிதம்
2023-08-22 14:42:51

இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை ஆகஸ்டு 21ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான நாட்டின் பணவீக்க விகிதம் ஜுன் திங்களில் 10.8 விழுக்காட்டிலிருந்து ஜூலை திங்களில் 4.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி துறைத் தலைவர் கூறுகையில், இவ்விகிதம் ஆகஸ்டு திங்கள் மேலும் குறைந்து, 4 முதல் 6 விழுக்காடு வரையான நிலையில் இருக்கும் என்றார்.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் அந்நாட்டில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 73.7 விழுக்காடாகும். அதையடுத்து, இவ்விகிதம் நிதானமாகக் குறைந்து வருகிறது.