அணு கழிவு நீரை வெளியேற்றும் நேரம் உறுதி: ஜப்பான் அறிவிப்பு
2023-08-22 11:17:08

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவு நீர் ஆகஸ்ட் 24ஆம் நாள் முதல் வெளியேற்றப்படும் என்று 22ஆம் நாள் நடைபெற்ற ஜப்பான் அரசு அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.

அதே வேளையில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோயிலுள்ள தலைமையமைச்சர் மாளிகைக்கு முன், மக்கள் பேரணி நடத்தி, இச்செயலுக்கு மனநிறைவின்மை தெரிவித்தனர்.