அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழை குறித்த எச்சரிக்கைகள்:ஐரோப்பிய நாடுகள்
2023-08-23 14:43:07

அண்மையில், பல ஐரோப்பிய நாடுகள் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழை குறித்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் பிரான்சின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்றும், சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நார்வே மழைதொடர்பான சிவப்பு எச்சரிக்கையை 22ஆம் நாள் வெளியிட்டுள்ளதாக உலக வானிலை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கிளாரி நூரிஸ் தெரிவித்தார். சமீபத்திய வெப்ப அலை காரணமாக, பனிப்பாறை உருகுவது தீவிரமடைந்துள்ளது என்றும், இந்த போக்கு தொடர்ந்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.