அமெரிக்க வங்கிகளின் கடன்தரம் குறைக்கப்பட்டது:எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ்
2023-08-23 16:09:33

இம்மாதத்தின் தொடக்கத்தில், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச முதலீட்டு கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம், யூ.சி.பீ.வங்கி உள்ளிட்ட பத்து அமெரிக்க வங்கிகளின் கடன்தரத்தைக் குறைத்ததையடுத்து, 21ஆம் நாள் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனமும் 5 அமெரிக்க வங்கிகளின் கடன்தரத்தைக் குறைத்துள்ளது. அதேவேளையில், மற்ற இரண்டு அமெரிக்க வங்கிகளின் கடன்தரம் மீதான எதிர்காலத்தை முன்னாய்வு செய்யும் நிலை எதிர்மறையாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க வங்கி விகிதம் அதிக அளவு உயர்வு காரணமாக, வங்கிகளின் பணப் புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது, நிதி திரட்டுல் மற்றும் லாபம் பெறுதல் ஆகிய துறைகளில் வங்கிகளின் திறன் பெருமளவில் பலவீனமாக வழிகாட்டியதாகஎஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்தது.

தவிர, அமெரிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து பண இறுக்க கொள்கையைப் பின்பற்றினால், வங்கிகளின் வைப்புத் தொகை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.