சீன ஊடகக் குழுமம்-தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் ஒத்துழைப்பு
2023-08-23 20:03:30

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு தென்னாப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்கின்றார். இக்காலத்தில், இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள ஒற்றுமையை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் நாள் சீன ஊடகக் குழுமமும், தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனமும், ஜோஹன்னெஸ்பர்க் நகரில் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டன.

கால்பந்து பண்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டி தொடர்பு, மனித பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் ஒற்றுமை எட்டியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனத்தின் தலைவருடன் குறிப்பாணையை பரிமாறிக்கொண்டனர்.