விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கூடுதல் வெங்காய கொள்முதல்
2023-08-23 11:31:00

இந்தியாவில்விவசாயிகளின் நலனுக்காக, நாட்டின் மொத்த வெங்காய இருப்பை முன்ரு திட்டமிட்டப்பட்ட 3இலட்சம் டன்னிலிருந்து அளவிலிருந்து, 5இலட்சம் டன்னாக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும் என்று வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 23ஆம் நாள் தெரிவித்தார்.

குவிண்டாலுக்கு 2410ரூபாய் என்ற விலையில், கூடுதலாக 2இலட்சம் டன் வெங்காயங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெங்காய ஏற்றுமதிக்கு 40விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.