புற அண்டவெளி படைக்கலப்போட்டி விறுவிறுப்பு
2023-08-23 19:07:04

செயற்கைக்கோளுக்கு எதிராக ஏவப்படும ஏவுகணை சோதனைக்குத் தடை விதிப்பது குறித்து, அமெரிக்கா முன்வைத்த வாக்குறுதியில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் சேர்வதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் 23ஆம் நாள் கூறுகையில், செயற்கைக்கோளுக்கு எதிரான ஏவுகணை சோதனை பற்றி அமெரிக்கா வழங்கிய வாக்குறுதி, இத்தகைய ஆயுதங்களின் ஆய்வு, தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றிக் குறிப்பிடவில்லை. பேச்சுவார்த்தை மூலம், புற அண்டவெளியில் படைக்கலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை உருவாக்குவது, புற அண்டவெளி பாதுகாப்புப் பிரச்சினையின் அடிப்படைத் தீர்வாகும் என்று தெரிவித்தார்.