© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சிங்கப்பூரில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்து அவர்களுடன் விவாதம் நடத்தியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் 23ஆம் நாள் தெரிவித்தது.
விக்கிரமசிங்க திங்களன்று சிங்கப்பூரின் அரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்து, உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் மற்றும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு முதலியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
செவ்வாய்கிழமையன்று சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ சியென் லூங்கை விக்கிரமசிங்க சந்தித்தார். இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதம் நடத்தினர்.
தவிரவும், விக்கிரமசிங்க மற்றும் லீ சியென் லூங் ஆகியோரின் முன்னிலையில், பாரிஸ் உடன்படிக்கையின் 6ஆவது பிரிவின் கீழ் உள்ள கார்பன் கடன் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தெரியவந்துள்ளது.