ஜப்பானின் அணு கழிவு நீரை வெளியேற்றும் முதலாவது தொகுதி
2023-08-23 17:07:36

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவு நீர் 24ஆம் நாள் முதல் வெளியேற்றத் தொடங்கப்படும் என்று ஜப்பான் அரசு ஆகஸ்ட் 22ஆம் நாள் அறிவித்தது.

டோக்கியோ மின்சார நிறுவனம் அதே நாள் இதற்கான விரிவான திட்டத்தை வெளியிட்டது. திட்டப்படி 17 நாட்களுக்குள், முதலாவது தொகுதியான 7800 டன் அணு கழிவு நீர் வெளியேற்றப்படும். 2023ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 200 டன் அணு கழிவு நீர் வெளியேறக் கூடும்.

கதிர்வீச்சுக் கழிவு நீர் மற்றும் பொருட்கள் கடல் சூழலில் கலப்பது குறித்து சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளது.  அணு கழிவு நீரில் 64 வகை கதிர்வீச்சுத் தன்மை வாய்ந்த கூறுகள் உள்ளன என்று சீன கடல் சட்ட சங்கத்தின் தலைவர் கோவ் ச்சிகோ தெரிவித்தார்.

திட்டப்படி, ஜப்பான்னின் இச்செயல் குறைந்தது 30 ஆண்டுகாலம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.