ஜப்பான் அணு கழிவு நீரை வெளியேற்றுவது பற்றிய சீனாவின் வேண்டுகோள்
2023-08-23 18:47:32

ஜப்பான் அரசு ஆகஸ்ட்  24ஆம் நாள் பிற்பகல் 1 மணி முதல் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவு நீரை வெளியேற்ற உள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆகஸ்ட் 24ஆம் நாள், கடல் சூழல் பேரிடர் தினமாக மாறாது என்று சீனா எதிர்பார்க்கின்றது. ஜப்பான் அறிந்து செயல்படுவதால், இந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.