ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை விதித்தது சீனா
2023-08-24 15:48:58

ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை விதிக்கும் அறிக்கை ஒன்றை சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஆகஸ்ட் 24ஆம் நாள் வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, ஃபுகுஷிமா அணுக்கழிவு நீரை ஜப்பான் வெளியேற்றி வருவதால் உணவுக்கு ஏற்படும் கதிரியக்க மாசுபாட்டு இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையிலும், சீன நுகர்வோர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யுமாறும், ஆகஸ்ட் 24ஆம் நாள் முதல், ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை விதிப்பதென முடிவெடுத்துள்ளதாக சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.